டொனால்ட் றம்பிற்கு முதல் தலையிடியாக அமையப் போகும் ஆப்காணிஸ்தான்!

Submitted on வெள், 04/21/2017 - 13:17

இரண்டு மூன்று ஆண்டுகளிற்கு முடித்துவிடலாம் என நினைத்து 2001ம் ஆண்டு தொடக்கப்பட்ட ஆப்காணியப் போர் இன்று 15 ஆண்டுகள் கழிந்த நிலையும் முன்னேற்றத்தைக் காணவில்லை. 

மாறாக தலிபான்கள் முன்னேறி வருகின்றார்கள், மாவட்டங்கள், மாகாணங்களென தங்களின் அதிகார வரம்மை உச்சநிலைப்படுத்தி ஆப்காணிய தேசத்தில் அமெரிக்காவின் இருப்பைக் கேள்விக் குறியாக்கி வைத்துள்ளார்கள்.

அமெரிக்காவும் சும்மாவல்ல, அதன் இன்றைய வரையான வரலாற்றிலேயே அதிக நாள் போரிடப்பட்ட ஒரு போராக ஆப்காணியப் போரை ஆக்கியுள்ளதுடன், அதற்காக இது வரை 115 பில்லியன்கள் செலவளித்துள்ளது.

அதாவது 115,000 மில்லியன் டொலர்களைச் செலவளித்தும் 1865 வீரர்களைப் பலி கொடுத்தும், 20,224 வீரர்களைக் காயப்படுத்தியும் இப்போதும் நடைபெறும் இந்த ஆப்காணியப் போர் டொனால்ட் றம்பிற்குத் தலையிடியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இப்போது 13 ஆயிரம் துருப்புக்களை ஆப்காணில் வைத்துள்ள அமெரிக்காவிற்கு அடுத்த தெரிவு என்ன எப்பதை திரு; டொனால்ட் றம்ப் அவர்க்ள தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.