ஊடகவியலாளர்கள் எவ்வாறு இரகசியத் தகவல்களைப் பெறுகின்றார்கள்?

Submitted on திங், 04/24/2017 - 09:23

ஜேர்மணியப் பத்திரிகையொன்றை அநாமதேய நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். உங்களிற்கு இரகசியத் தரவுகள் வேண்டுமா? இது தான் அந்த நபர் பத்திரிகையாளரிடம் கேட்ட கேள்வி.

ஆமாம் என்றார் பத்திரிகையாளர். தருகிறேன். ஆனால் என்னைப் பற்றிய எந்த விடயங்களையும் கேட்கக்கூடாது.
அப்படியே ஆகட்டும் என்றார் பத்திரிகையாளர். ஆனால் அநாமதேய நபர் இன்னொரு வேண்டுகோளையும் விடுத்தார்.

“எனக்கு உயிராபத்து ஏற்படலாம்” எனவே இரகசியம் பேண வேண்டும். தரவுகள் குறித்த கருத்துக்களைக் கேட்கலாம் என்றார்.

உலகத்தின் மாபெரும் மறுபக்கத்தை காண்பிப்பதற்கான அவரது முயற்சியில் அந்தளவிற்கு தகவல்கள் இருந்தது அவருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. உலகை மாற்ற நினைத்தார்.

அனுப்பத் தொடங்கியவர் அந்த தகவல்கள் அபரிமிதமானவை. ஆனால் ஒரு பத்திரிகையால் கையாள முடியாதவை. எனவே பத்திரிகையாசிரியருடன் கலந்தாலோசித்தார்.

ஏனென்றால் அவ்வளவு இரகசிய ஆவணங்கள், புகைப்படங்கள், ஒப்பந்தங்கள் என 11 மில்லியன் பத்திரங்களை மேற்படி அநாமதேய நபர் அனுப்பியிருந்தார்.

ஆசிரியரின் ஆலோசனைப்படி அனைத்து ஆவனங்களையும் துப்பறியும் ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பிற்கு அனுப்பினார்கள்.

400 பேர் அங்கத்துவர்களாக கொண்ட இந்த ஊடகவியலாளர்கள் அமைப்பு விசாரணைகளைத் தொடங்கியபோதும் இந்த விவகாரத்தை யாருக்குமே கசிய விடாமல் கனகச்சிதமாகச் செய்தது.

ஊடகவியலாளர்கள் தங்களின் ஊடகங்களிற்கே தெரியாமல் ஆராய்ந்ததையும் இப்படியயொரு ஆவணக் கோப்பை ஊடகவியலாளர்கள் வைத்திருந்திருக்கினார்கள் என்ற உண்மையையும் நியூயோர்க் ரைம்ஸ் ஏடு கூட சகல துப்பறிவுகளும் பூhத்தியானதன் பின்னரே அறிந்து கொண்டிருந்தது.

இவ்வாறு 400 ஊடகவியலாளர்கள் 80 நாடுகளிலிருந்து ஒருங்கிணைந்து 25 மொழிகளில் இந்தத் துப்பறிவுகளை மேற்கொண்டனர்.

இப்படித்தான் இப்பொது 15 முக்கிய அரசியல் தலைவர்களையும், 2 லட்சம் கம்பனிகளையும் அது சார்ந்த பல்லாயிரக்கணக்கான பங்காளிகளையும் சிக்கலில் மாட்டி விட்ட “பணாமா பேப்பர்ஸ்” நடைந்தேறியது.
எனவே எந்த ஒரு சட்டத்திற்கு புறம்பான செயற்பாடும், சமூகத்தின் பெயரின் இடம்பெறுகின்ற செயற்பாடும் இவ்வாறு தான் கண்டுபிடிக்கப்படுகின்றன.

கனடாவின் சார்பில் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகை இந்த விவகாரத்தில் இடம்பெற்றது. உங்களிற்கு கூட இவ்வாறான தகவல்கள் ஏதும் தெரிந்திருந்தால் நீங்கள் கூட அவற்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கோ (Ministry of Public Safety) அல்லது,

கம்பணிகள் சார்பாக பிரச்சாரங்களை செய்வோர் தொடர்பான முறைப்பாடுகளை (Lobbyist Canada) விலும் மேற்கொள்ளலாம்.