பெற்றோர்களே மிகவும் அவதானம்

Submitted on திங், 04/24/2017 - 09:36

கனடாவில் பருவமடைந்த பிள்ளைகளைத் தவறான வழியில் செயற்பட வைக்கும் முனைப்பான செயற்பாடுகள் பலவும் கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள், மடிக்கணணிகள் என்று மாத்திரமல்லாது பிள்ளைகளின் விருப்பிற்கேற்ப விலையுயர்ந்த ஆடைகள் வாங்கும் பணமும் வழங்கப்பட்டு அவர்கள் தவறான வழியில் நடத்தப்படுகின்றார்கள்.

இவ்வாறான பொருட்களை அவர்களிற்கு கொடுத்து அவர்களை பாலியல் ரீதியில் அவர்களிற்கு அறிமுகமில்லாத நபர்களுடன் ஈடுபட நிர்ப்பந்திப்பது போன்ற செயல்களோடு அவர்கள் இவ்வாறான பொருட்களை பெற்றதும், அவர்களை போதைப்பொருட் கடத்தல், விற்பனை போன்றவற்றில் ஈடுபடுத்துதல், கடணட்டை, வங்கியட்டை மோசடிகளில் ஈடுபட வைத்தல் போன்றவற்றையும் செய்யும் குழுமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்காத பொருட்களை பிள்ளைகள் வைத்திருந்தாலோ அல்லது அவர்களது நடையுடை பாவணையில் மாற்றம் ஏற்படுதல், நண்பர்களின் பொருட்கள் என வீட்டிற்கு விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு வருதல் போன்ற செயல்களிலும், வீட்டிற்கு மிகவும் தாமதாக வருதல் அல்லது நண்பர்களின் அழைப்புக்கள் வரும்போதேல்லாம் வீட்டை விட்டு வெளியே செல்லுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் தங்களின் பிள்ளைகளில் கவனம் கொண்டு செயற்படுவது மிகவும் முக்கியம்.