இந்தப் படத்தில் எத்தனை பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள்

Submitted on திங், 04/24/2017 - 09:43

இந்தப் படத்தில் இருப்பவர்கள் இரண்டு பேரே. பிரதிமை, பிம்பம் ஆகியனவே இவ்வாறு பலர் போலத் தோற்றமளிப்பதற்கான காரணம்.

இரண்டு பக்கமும் இருக்கும் கண்ணாடிகள் இவர்களது படங்களை இவ்வாறு காட்டினால்; அவர்கள் அமர்ந்திருக்கும் விதம் கூட உங்களுடைய “முடிவெடுத்தலில்” தாக்கத்தைச் செலுத்தலாம்.

இருவருமே தங்களுடைய ஒவ்வொரு கைகளில் ரப்பர் வளையங்களை அணிந்திருந்தாலும், மறு கை சற்றே மேலே இருப்பதால் ஒரு பக்கக் கண்ணாடியில் மாத்திரமே அது தெரியும்படியாக அமைந்திருக்கின்றது.

மறுபக்கமாக இரண்டு பேரும் எதிரெதிர் திசைகளில் பார்த்தவண்ணம் இருக்கின்றார்கள். எனவே அதன் பிரதிமம் இவ்வாறு பலர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.