2036 ஆம் ஆண்டில் விண்கல் குறைந்து விடும்

Submitted on திங், 04/24/2017 - 09:54

யூன் 2004ல் கண்டுணரப்பெற்ற அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ ASTEROID APOPHIS (கதிரவனைச் சுற்றிவரும் குறுங்கோள்), 2029ல் புவிக்கு மேலாக 30,000 கிலொமீற்றர் உயரத்தில் செல்லும்;. அத்தோடு 2036ல் கோளொடு மோதுகின்ற வாய்ப்பு மிகக்குறைவு என ஆய்வு காட்டுகிறது.

அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ விண்கல் புவியைத் தாண்டி செல்லும் பொழுது உலகம் முழுதிருக்கும் வான சாத்திரிகள் அதனை ஊன்றிக் கவனிப்பர். அத்தோடு, வானத்தை நோக்குவோரும் இணையத்துக்குச் சென்று, 2036ல் கோளொடு மோதமுடியும் என ஆய்வு காட்டுகின்ற ‘அஸ்ரெறொயிட்’டின் படங்களை உடனுக்குடன் பார்க்கமுடியும்.

ஆனால், மேலும்  300 மீற்றருக்குக் கொஞ்சம் கூடிய விட்டமுள்ள அபோபிஸ் புவிக்கு இன்னும் 16 ஆண்டில் இதனிலும் கிட்டிய தொலைவுக்கு வரும் என அறிவியலாளர் கூறுகின்றனர். ஆன்ட்று ப~Pகாஸ், கனடா, ‘றோயல் அஸ்ற்றோனொமிக்கல் சொசையற்றிக்காகப் பேசவல்லவர் 2029ல் புவிக்கு மேலாக 30,000 கிலொமீற்றர் அளவான உயரத்தில் ‘அஸ்ரெறொயிட்’ செல்லும்; எனச் சொல்கின்றார்.

ஏப்பிறில் 2036ல் மீண்டும் அது சுற்றி வருகையில், அபோபிஸ்ஸொடு மோதுகின்ற வாய்ப்பு மிகவும் குறைவேயென, புவிக்கு அணித்தாயுள்ள‘ அஸ்ரெறொயிட்’களில் செய்த ஆய்வு காட்டுவதாக பிகாஸ் சொல்கின்றார்.

புவியீர்ப்பு விசையினால் ‘அஸ்ரெறொயிட்’ செல்லும் பாதை, சிறிதாக மாறியிருக்கலாம்: ஆகையினால் மேலும் கணிப்புகள் செய்யவேண்டியிருக்கும் என அவர் கூறுகிறார், இப் படத்தில் உள்ளது தான் மேற்குறிப்பிட விண்பாறை.