ஹோசி பாட்டிஸ்டா டொரான்டோ ப்ளூ ஜெசிகா

Submitted on வியா, 04/20/2017 - 11:02

பிரபல பேஸ்பால் வீரர் ஹோஸே பட்டீஸ்டா இந்த ஆண்டும் டொரோண்டோ ப்ளூ ஜேஸிக்கே விளையாடுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதன் கிழமையன்று பட்டீஸ்டா அவர்கள் ப்ளூ ஜேஸ் விளையாட்டுக்கழகத்துடன் சுமார் 18 மில்லியன் டாலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பதை ப்ளூ ஜேஸ் விளையாட்டுக்கழகம் உறுதி செய்துள்ளது.

36 வயதான பட்டீஸ்டா ப்ளூ ஜேஸ் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர்களில் ஒருவர்.

சொல்லியடிப்பதில், அதுவும் நெத்தியடியாக அடிப்பதில் பட்டீஸ்டாவிற்கு நிகர் பட்டீஸ்டாவே!

பட்டீஸ்டாவில் மீள் வருகையானது இந்த ஆண்டும் டொரோண்டோ ப்ளூ ஜேஸை ஒரு சிறந்த அணியாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது!