ஸ்காபுறோவில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து நடந்த கொள்ளை

Submitted on வியா, 04/20/2017 - 11:41

வீட்டுக்குள் அத்துமீறி நூழைந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவரை அடையாளம் காட்டுமாறு டொரோண்டோ போலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள். ஸ்காபுறோவில் விபச்சாரம் நடைபெறுவதாக கூறப்படும் ஒரு அப்பார்ட்மெண்ட்டிற்குள் வாடிக்கையாளர்கள் போன்று உள்நுழைந்த இந்த சந்தேகநபர் இருவரும், அங்கு இருந்த மூன்று பேரிடம் பணம் தருமாறு வேண்டியிருக்கின்றார்கள். இந்த சந்தேக நபர் இருவரிடமும் துப்பாக்கிகளும் கத்தியும் இருந்திருக்கின்றது.

உள்நுழைந்த சந்தேக நபர்கள், அப்பார்ட்மெண்ட்டிலுள் இருந்த இருவரை கட்டிப்போட்டதுடன் மட்டுமல்லாது துப்பாக்கியாலும் தாக்கியுள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் கட்டடத்தினுள் உள்நுழைந்த காவல்துறையினர், அப்பார்ட்மெண்ட்டினுள் இருந்து துப்பாக்கி சத்தம் வந்ததையும் கேட்டுள்ளார்கள்.

காவல்துறையினர் அப்பார்ட்மெண்ட்டினுள் நூழைந்தபோது, சந்தேகநபர் இருவரும் பல்க்கணியால் இறங்கி தப்பியோடி இருக்கின்றார்கள்.

காவல்துறையினர் முதலாவது சந்தேக நபரை இவாறு விபரிக்கின்றார்கள்: சுமார் 25 இல் இருந்து 35 வயது மதிக்க தக்க ஆசிய ஆண், ஒல்லியான உடல்வாகு, கட்டையாக வெட்டப்பட்ட முடி. இந்த சந்தேக நபரின் உயரம் சுமார் 5 அடியில் இருந்து 11 அங்குலம் வரை.

காவல்துறையினர் இரண்டாவது சந்தேக நபரை இவாறு விபரிக்கின்றார்கள்: சுமார் 35 இல் இருந்து 40 வயது மதிக்க தக்க ஆசிய ஆண், நடுத்தர உடல்வாகு. இந்த சந்தேக நபர் உலோகத்தினால் ஆன சட்டத்தில் கண்ணாடி அணிந்திருந்ததாகவும், இவனில் உயரம் சுமார் 5 அடியில் இருந்து 9 அங்குலம் வரை எனவும் போலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இருவரும் ஆயுதம் தரித்த ஆபத்தானவர்கள் என போலிஸார்மேலும் தெரிவிக்கின்றனர்.