விக்னேஸ்வரன் நிதிசேர்ப்பு விழா

Submitted on வியா, 04/20/2017 - 12:38

கனடாவில் இடம்பெற்ற முதல்வர் நிதியத்திற்கான நிதி சேர்ப்பு விழாவில் கலந்து கொள்ள விழைந்த கனடாவின் தமிழ்ப் பிரமுகர்கள் மிகுந்த அவமானங்களைச் சந்திக்க நேர்ந்ததுள்ளது.

குறிப்பாக ஒரு சர்ச்சைக்குரிய பிரிவால், கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் இயக்குனர்களாக இருந்தவர்களை முன்னிலைப்படுத்தியும், அவர்களது பரிவாரங்களை பயன்படுத்தியுமே இந்த நிதி சேகரிப்பு இடம்பெற்றது.

யாரால் இந்த நிதி சேர்க்கப்படுகின்றது என்பதையிட்டும் இந்த நிதி கணக்கு வழக்குகள் ஏதுமற்ற நிலையில் வேறு தேவைகளிற்காக பயன்படுத்தப்படும் பலரும் சுட்டிக்காட்டியிருந்த போதும், எந்தவித சலனமுமில்லாமல் முதல்வர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் கனடாவின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை  டையாளப்படுத்தும் சால்வையை அணிந்திருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னைநாள் பாரர்ளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன், அங்கிருந்த இளைஞர்களால் அணுகப்பட்டு அவரது சால்வை பறிக்கப்படட்டது. 80 வயதுடைய ஈழவேந்தன் இது குறித்து மனக்கிலேசமடைந்து நிகழ்விலேயே அழுதிருந்தார். அதுபோலவே, கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள், முன்னிலை வரிசையில் அமர்ந்த போது அங்கு வந்த ஒரு அடாவடித்தனமான இளைஞனால் “இது உணக்கான இடமல்ல, பின்வரிசையில் போய் இரு” என மிரட்டப்பட்ட போது அவர் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இந்த இளைஞர் ஒரு சர்ச்சைக்குரிய பிரிவினருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்பதை அவரது சகல நடவடிக்கைகளும் காட்டி நின்றன. இவர் இவ்வாறான பல நடவடிக்கைகளிற்கு முன்னரும் பாவிக்கப்பட்டிருந்தார். இதேவேளை இந்த நிதிசேகரிப்பு விழாவில் மார்க்கம் நகராட்சி உறுப்பினர் லோகன் கணபதி கலந்து கொள்ளவில்லை. மார்க்கம் நகராட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பில் கனடா வந்த முதலமைச்சர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எதிர்ப்பாகவே அவர் அதனைப் புறக்கணித்ததாகவே பலரும் நம்பியதாக தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் செயலர் நிமலன் கார்த்திகேயனே இந்த விவகாரத்தில் முன்னிற்று செயலாற்றியதோடு, முதலமைச்சரை இந்த நிதிசேர்ப்பில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அத்தோடு நிமலன் கார்ததிகேயன் கனடாவில் பல ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டதையும் ஒரு சாரார் வியப்புடன் சுட்டிக் காட்டுகின்றனர். குறிப்பாக கனடாவில் முதலமைச்சர் பங்கெடுத்த பல நிகழ்வுகளிலும் இலவசமாக பல ஊடகங்கள் புகைப்படமெடுத்து அவற்றைப் பிரசுரிக்க, நிமலன் தனது தேவைக்காக என ஒரு புகைப்படக்காரனை பல நூறு டொலர்களிற்கு ஒவ்வொரு நிகழ்விலும் புகைப்படமெடுக்கப் பணிக்கமர்த்தி, அந்தப் படங்களை தானே நேடியாகப் பெற்று இலங்கையில் தனக்கு நம்பிக்கையான இலங்கை ஊடகங்களிற்கு அல்லது மாற்றுத் தலைமைக்கு அனுப்பினார் என நம்பப்படுகின்றது.

ஆனால் இவ்வளவு பணம் இவருக்கு எப்படிக் கிடைத்தது? இது முதல்வரின் பயணச் செலவில் உட்படுத்தப்பட்டதா? போன்ற விபரங்கள் இவர்களது பயணச் செலவு அறிக்கையில் வெளிவரும் என நம்பப்படுகின்றது.