தமிழ் ஊடகவியலாளரில் அக்கறை செலுத்திய பிரம்டன் மேயர்

Submitted on வியா, 04/20/2017 - 13:16

கடந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் வவுனியா நட்பு நகரங்களாக கனடாவிலுள்ள பிரம்டன் மற்றும் மார்க்கம் நகராட்சிகளுடான உடண்பாடு குறித்து கருத்தறிய முற்பட்ட டகவியலாளருக்கு ஒரு புதுமாதிரியான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

தன்னை ஒரு பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளராக றிமுகப்படுத்தி, இரண்டு நகராட்சிகளிடமும் இந்த நட்பு நகர ஏற்பாடுகள் குறித்து மூன்று கேள்விகளை கேட்டு ஒரு தமிழ் ஊடகவியலாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

இதற்கான பதிலை மேற்படி நகர மேயர் நேரடியாகவே வழங்கி, இது குறித்த மேலதிக விபரங்கள், இராஜாங்க நடைமுறைகளையும் விமானநிலையத்தில் எவ்வாறு இராஜதந்திரிகள் வரவேற்கப்படுகின்றனர் என்பதையெல்லாம் தெரிவித்திருந்;தார். இவ்வாறு நகர முதல்வரை ஒரு ஊடகவியளாளர் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை அறிந்த ஒரு குழு மேற்படி டகவியலாளரைக் குறிவைத்துக் காழ்ப்புப் பிராச்சாரங்களை மேற்கொண்டது.

இதனை நகர முதல்வரின் கவனத்திற்கு மேற்படி ஊடகவியளாலர் கொண்டு வந்த போது, அதிலுள்ள ஆபத்துக்களை ஆராய்ந்த முதல்வர் அலுவலகம் தானாகவே ஒரு கைங்கரியத்தை மேற்கொண்டது.

இது குறித்துக் காவற்துறைக்கு அறிவித்த மேயர் அந்த ஊடகவியலாளருக்குத் தேவையான கரிசனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியிருக்கின்றார். இது தொடர்பாக காவற்துறை தொடர்பு கொண்ட போது சமூகஞ்சார்ந்த ரீதியில் இந்த பிரச்சினையைத் தீர்க்கலாம் என தான் நம்புவதாக மேற்படி ஊடகவியலாளர் கூறியதுடன், இவ்வாறான காழ்ப்புப் பிரச்சாரங்கள் தொடர்ந்தால் அவரை மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறியுள்ளார். பிரம்டன் மேயரின் முன்னூதரணத்தை மற்றையவர்களும் பின்பற்றினால் தமிழ் ஊடக உலகம் ஆரோக்கியமாக இயங்கும் என்பது வெள்ளிடை மலை.