“கபைன்” [caffeine] என அழைக்கப்படும் பொருள்

Submitted on வெள், 04/21/2017 - 12:01

கணிசமான அளவு “கபைன்” என அழைக்கப்படும் பதார்த்தம் சில உணவுப் பொருட்களில் காணப்படுவதாகத் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல அந்தப் பொருட்களில் ஒட்டப்பட்டுள்ள லேபல்களில் அவற்றைப்பற்றிய அறிவிப்பு இல்லாது இருக்கின்றது அல்லது பிழையாகவிருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கபேன் என்பதன் அளவானது தனிப்பட்டவகையில் பெரிய பிரச்சினையில்லை, ஆனால் ஏதாவது மாத்திரைகள் அல்லது அவைபோன்றவை கோப்பி, சத்தி தரவல்ல பானங்கள், அல்லது அதிகளவில் கவேன் என்பதை உள்ளடக்கிய உணவுவகை அல்லது பானங்களுடன் சேர்ந்து அருந்தப்படும்போதுதான் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.

புhவனையாளர்கள் இவ்வாறான பொருட்களை வாங்கும்போது அவற்றுள் என்னவகைப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன, என்பனபற்றி அதிகம் தெரிவதில்லை என அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர்கள் 31 விதமான உணவுப் பொருட்களில் இந்த ஆய்வை செய்திருந்தார்கள். இவற்றில் 11 வகையான வற்றில் மூலிகைப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை பட்டியலிடப்பட்டிருந்தன. இவற்றில் கவேன் சேர்க்கப்படவில்லை அல்லது மிக மிகச் சிறிதளவில் சேர்க்கப்பட்டிருந்தது.

மிகுதியில், ஒன்பது பொருட்களுக்கு மட்டும் கவேன் இருப்பது பற்றிச் சரியான லேபல் இடப்பட்டிருந்தன. அடுத்த ஐந்து வகையானவை லேபலில் குறிப்பிட்ட அளவைவிட அதிகமான அளவில் கவேன் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எஞ்சிய ஆறுவகை உணவுப் பொருட்களில் ஒட்டப்பட்டிருந்த லேபல்களில் கவேன் இருப்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் இராசாயனப் பகுப்பு ஆராய்ச்சியின்படி அவைகள் 210 மில்லி கிராம் தொடக்கம் 310 மில்லிகிராம் அளவுகளில் கவேன் சேர்க்கப்பட்டிருந்தமை தெரியவந்திருக்கின்றது. இந்த அளவானது ஒரு முறை பாவனைக்கு மட்டுமே. காப்பியுடன் ஒப்பிட்டால் 8 அவுன்ஸ் கோப்பை காப்பிக்கு 100 மில்லிக்கிராம் கவேன் உள்ளடக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.

இவ்வாறே இராணுவத் தளங்களில் பாவிக்கப்படுவது கவலையளிப்பதாக ஆய்வு செய்த குழுவினர் தெரிவிக்கின்றனர். கவேன் ஆனது கூடுதலான அளவில் பாவிக்கப்படும்போது அவற்றின் பக்கவிளைவுகள் பாரதூரமானவையாயக இருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. கூடுதல் கவேன் நடுக்கம், கலக்கம் என்பவற்றைக் கூட்டுவதுடன் அவர்களுக்கு மேலதிகமான தொந்தரவையும், ஒரு இறுக்கமான சூழலையும் தோற்றுவிக்கின்றது.