முழுநிலவிற்கும் மனநலம் பாதிக்கப்பட்ட

Submitted on வெள், 04/21/2017 - 12:08

பல காலமாக முழு நிலவு காலத்தின் போதும் அமாவாசையின் போதும் மன நோய் முற்றுகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மொண்ட்ரியலில் நடந்த ஒரு ஆய்வு நிலவுக்கும் மன நிலைக்கும் தொடர்பில்லை என்று சொல்லுகிறது.

லாவல் பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 2005லிருந்து 2008 வரை மாண்ட்ரியல் மருத்துவமனைகளுக்கு வரும் மன நோயாளிகளை ஆராய்ந்துப் பார்த்திருக்கிறார்கள்.

அவர்கள் மருத்துவமனைக்கு வரும் காலத்துடன் பௌர்ணமி, அமாவாசை போன்ற காலங்கள் ஒத்துப் போகிறதா என்று சரி பார்த்திருக்கிறார்கள். ஆனால் அப்படி எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

‘பௌர்ணமி, அமாவாசை காலங்களின் போது மன நோயாளிகளிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜெனிவிவ் பெல்வில். 771 நோயாளிகளை ஆராய்ந்தப் பிறகு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால் இதில் ஒரேயொரு விதிவிலக்கு இருக்கிறது. பௌர்ணமிக்கு முந்தின காலிறுதி காலத்தில் மட்டும் மன படபடப்பு 32 சதவீதம் குறைவாக் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை உள்ள காலத்தை நான்காக பிரித்திருக்கிறார்கள்.

‘இது தற்செயலான சம்பவமாக இருக்கலாம். அல்லது எங்கள் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம்’ என்று அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.